கொரோனா பாதிப்பை, 20 நொடிகளில் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை, கோவையை சேர்ந்த
நிறுவனம் கண்டறிந்துள்ளது.
'கொரோனா' பாதிப்பை உறுதிப்படுத்த, ஒருவரின் சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு
உட்படுத்துவது அவசியமாகிறது.
இதற்கு ஏறக்குறைய, இரு நாட்கள் வரை பிடிக்கிறது.இதன் மூலம், நோய் பாதிப்பு அதிகரிப்பதோடு, ஆரம்ப கட்ட சிகிச்சையில் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருதி கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள
'ஏ.இ.எஸ்., டெக்னாலஜிஸ்' நிறுவனம், புதிய தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளது.
இதன் மூலம், 20 நொடிகளில் 'கொரோனா' பாதிப்பைகண்டறிய முடியும் என்கிறார், நிறுவன முதன்மை செயல் அலுவலர் ரமேஷ்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
எங்கள் நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை இணைய தள சேவைகளுக்கு தேவையான மென்
பொருட்கள் உட்பட, 11 மென்பொருள் தயாரிப்பில்
ஈடுபட்டு வருகிறது.
'ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.,)' எனும் தொழில் நுட்பத்தை, நகை தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளோம். இதையடுத்து, 'கொரோனா' பாதிப்புக்கு ஏ.ஐ., தொழில் நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
சீனாவில், 'அலிபாபா டாட் காம்' நிறுவனம், இந்த தொழில் நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி உள்ளது.
அவர்களிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் இந்நடைமுறையை பயன்படுத்தினர்.
அதில், 96 சதவீதம் துல்லிய முடிவுகளை அளித்துள்ளனர்.தற்போது நம்மிடம் உள்ள குறைந்தளவு தகவல்களின் மூலம், 70-80 சதவீதம், துல்லிய முடிவுகளை தரமுடியும்.அறிகுறிகள் உள்ள ஒருவரின் எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன்பரிசோதனை மூலம், 20 நொடிகளில், கொரோனா பாதிப்பை
உறுதி செய்ய முடியும்.
இதன்படி, உடல் வெப்பத்தை 'தெர்மல் டிடெக்டர்கள்' மூலம் கணக்கிட்டு, தேவைப படு வோருக்கு, எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன் எடுத்து, அதன் மூலம் பரிசோதனை செய்தால் பாதிப்பு குறித்து தெரியும்.
அரசு நமக்கு உதவி செய்தால், நாமும், 96 சதவீத துல்லியத்தை வழங்க முடியும். பாதிப்பு உள்ள ஒருவருக்கு துவக்க நிலையிலேயே உறுதி செய்ய முடியும்.
இதன் மூலம் சிகிச்சை விரைந்து வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்