🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
கல்லூரி சான்றிதழில் பெயர் மாற்றம்

பள்ளி, கல்லூரி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்வது எப்படி?

முழுமையான வழிகாட்டுதல் மற்றும் கட்டண விவரங்கள்

அரசிதழ் பெயர் மாற்றம்

பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது பெயரில் ஏற்படும் சிறு பிழைகளை (ஒற்று, குறில், நெடில்) அந்தந்த கல்வி நிறுவனங்களிலேயே திருத்திக் கொள்ளலாம். ஆனால் முழு பெயர் மாற்றம், இனிஷியல் மாற்றம் போன்றவற்றிற்கு அரசிதழில் (Gazette) விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.

விளம்பரம்

📄 எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
  • சமீபத்திய புகைப்படம் ஒட்டி, கெசட்டட் (Group A or B) அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.
  • வெளிமாநிலத்தவர் எனில் இருப்பிடச் சான்று (Ration Card/Passport/Voter ID) அவசியம்.
  • தத்தெடுத்திருந்தால் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகல் தேவை.

💰 கட்டண விவரங்கள்

பொதுப் பெயர் மாற்றம் ₹ 415/-
தமிழில் பெயர் மாற்றம் ₹ 50/-
அரசிதழ் + அஞ்சல் ₹ 65/-

*கட்டணங்கள் அரசு விதிமுறைப்படி மாறுபடலாம்.

கட்டணம் செலுத்தும் முறை

நேரில் செலுத்த:

அலுவலகத்தில் காலை 10:00 - 1:00 மற்றும் மதியம் 2:00 - 3:00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் வழி (DD):

"உதவி இயக்குநர் (வெளியீடுகள்)" என்ற பெயரில் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வங்கி வரைவோலையாக அனுப்பலாம்.

விண்ணப்பிக்கும் முன்...

  • பெயர் மாற்றத்திற்கான சரியான காரணம் இருக்க வேண்டும்.
  • 'Alias' (என்கிற) என்று பிரசுரிக்க இயலாது.
  • அரசிதழ் பிரசுரமான 6 மாதங்களுக்குள் பிழைகளைச் சரிபார்க்க வேண்டும்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய நிபந்தனைகள்

  • விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் தொடர்பு கொள்ளக் கூடாது.
  • கட்டணம் தொடர்பாக நினைவூட்டல் கடிதங்கள் வராது.
  • துறையால் வழங்கப்பட்ட அசல் படிவம் மட்டுமே ஏற்கப்படும்.
  • நகல் அல்லது வெளியில் அச்சிட்ட படிவங்கள் செல்லாது.

கையெழுத்திடும் முறை (Minor/Major)

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், தந்தை, தாயார் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் உரிய நீதிமன்ற ஆணை (Legal Guardianship Order) இணைக்கப்பட வேண்டும். தத்தெடுத்திருந்தால் வளர்ப்புப் பெற்றோரே கையெழுத்திட வேண்டும்.

📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

கருத்துகள்

  1. தமிழக அரசின் அரசிதழில்.பெயர்மாற்றம் பெற்றபின். கல்லூரி மற்றும் பள்ளி சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்துபெற என்ன வழிமுறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகத்தை அணுகினால் மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

      நீக்கு

கருத்துரையிடுக

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]