கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 1326
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Mining - 288 
2. Electrical - 218 
3. Mechanical - 258 
4. Civil - 68
5. Coal Preparation - 28 
6. Systems - 46 
7. Materials Management - 28 
8. Finance & Accounts - 254 
9. Personnel & HR - 89 
10. Marketing & Sales - 23 
11. Community Development - 26 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி  30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
தேர்வு கட்டணம்: ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
source:dinamani