சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து,மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவருக்கு கௌடில்யர், விஷ்ணுகுப்தர் போன்ற பெயர்களும் உண்டு. இவர் பொருளியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.
இந்திய வரலாற்றிலேயே இவரைப் போன்ற சிறந்த அரசியல் ஆலோசகர் வேறு யாரும் இருக்க முடியாது. பெண்களைப் பற்றிய இவரது சிந்தனை பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
சாணக்கியர் தனது படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. அப்போது இந்த பல்கலைகழகம் தான் உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்தது.
1.உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன்