மொபைல் அப்ளிகேஷன்களிடம் இருந்து உங்கள் சொந்தத் தகவல்களைப் பாதுகாப்பது எப்படி?
நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துகிறோம். இந்தச் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன் (App) கள் நமது சொந்தத் தகவல்களை அணுகுவதற்கு (Access) நாமே அனுமதி வழங்குகிறோம்.
எந்தவொரு ஆப்-ஐப் பயன்படுத்தும்போதும் அதற்கு அனுமதி (Permission) வழங்கும்போது, நமது தகவல்களை நாமே பகிர்கிறோம். இதன் மூலம் நமது Messages, Contacts, Images, Videos, Camera மற்றும் Microphone (Mic) போன்றவற்றை அந்த ஆப்-கள் அணுக முடியும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
தேவையான நேரத்தில் மட்டும் இணையத்தை ஆன் செய்யவும்
மொபைல் இன்டர்நெட்டை எப்போதும் ஆன் செய்து வைக்காமல், தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்வதன் மூலம் Camera மற்றும் Mic வழியாக ரகசியமாகத் தகவல்கள் கசிவதைத் தவிர்க்கலாம்.
ஆப் பெர்மிஷன்களை நிர்வகித்தல் (Permission Management)
ஒவ்வொரு முறையும் ஒரு ஆப்-ஐப் பயன்படுத்தும்போது மட்டும் அனுமதியை வழங்கிவிட்டு, பிறகு அதனை ஆஃப் செய்வதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம். அது எவ்வாறு என்பதை கீழே காண்போம்:
படி 01:
மொபைலில் Settings சென்று Apps & Notifications என்பதைத் திறக்கவும்.
படி 02:
குறிப்பிட்ட ஆப்-ஐத் தேர்வு செய்து Permissions ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
கீழே உள்ள படத்தில் காட்டியவாறு உங்கள் ஆப்-களுக்கு நீங்கள் வழங்கியுள்ள அனுமதிகளைச் சரிபார்க்கலாம். (உதாரணத்திற்கு Camera, Contacts போன்றவை ஆன் செய்யப்பட்டிருக்கும் நிலை).
ஆன் செய்யப்பட்ட நிலை
ஆஃப் செய்யப்பட்ட நிலை
தேவையற்ற நேரங்களில் இவற்றை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட்டில் இருந்து பாதுகாக்கலாம்!
பயன்படுத்தாத ஆப்-களை நீக்குங்கள் (Uninstall)
சில அப்ளிகேஷன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்படியே வைத்திருப்போம். அவற்றை Uninstall செய்வதன் மூலம் அவை பின்னணியில் (Background) உங்கள் தகவல்களை அணுகுவதை நிரந்தரமாகத் தவிர்க்கலாம்.
0 Comments