உளவியல் மற்றும் வாழ்வியல் நூல்கள்
தாம்பத்தியம், உளநலம் மற்றும் வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டிகள்
அர்த்தமுள்ள அந்தரங்கம்
டாக்டர் ஷாலினி
உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது.
பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்களையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் ஷாலினி.
டூயட் கிளினிக்
டாக்டர் டி.நாராயண ரெட்டி
அன்பு, கோபம், ஆசை, காதல், காமம் என மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும்? பாலுணர்வு தொடர்பான செய்திகளை குழந்தைகளிடம் எப்படிச் சொல்ல வேண்டும்? தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
ஆனந்த விகடனில் 'டூயட் கிளினிக்' என்ற தலைப்பில் வெளிவந்த இத்தொடரில், நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் டாக்டர் டி.நாராயண ரெட்டி.
தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை
இந்தியா என்கிற புனித பூமியின் பெருமைகளில் முதன்மையாகத் திகழும் ஒரு ஞானத்தைத் தழுவியே இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
ஆண்களுக்கான ஓர் அற்புதப் புதையல்! இன்பம், மன அமைதி, பணியில் கவனம், வெற்றிகரமான வாழ்க்கை, மகிழ்ச்சியான இல்லறம், உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுள் என அனைத்தையும் பெற்று வாழ விரும்பும் ஆண்களுக்கான சிறந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டி!
குறிப்பு: நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக மட்டுமே இங்கே பகிரப்படுகிறது. இதுபோன்ற சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க அவர்களின் அசல் நூல்களை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்!
0 Comments