டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி?
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? · உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
குறிப்பு : நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக மட்டுமே நூல்கள் பகிரப்படுகிறது . இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள்.
0 Comments