நோக்கங்கள்:
- மாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதார கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளிவிவர தரவு சேகரிப்பு, தொகுத்தல்.
- பயிர்கள் வாரியாக பாசன மற்றும் நீர்ப்பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் புவியியல் நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை சேகரிக்கவும் மற்றும் நில பயன்பாட்டு முறை, பயிர் பல்வகைப்படுத்தல், பாசன மற்றும் பயிர்கள் பற்றிய பல்வேறு திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றிற்கான தரவு பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறையில் உள்ள திட்டங்கள்
பயிர் மதிப்பீட்டு ஆய்வு
தமிழ்நாட்டில் நெல் சிறுதானியங்கள் ( சோளம் , கம்பு , கேழ்வரகு ) , வேர்க்கடலை , எள் , சூரியகாந்தி , கரும்பு , பருத்தி , பயறுகள் (துவரை , உளுந்து , பச்சைப்பயிறு ) ஆகிய பயிர்களின் சராசரி விளைச்சலையும், மொத்த உற்பத்தியையும், துல்லியமாகக் கணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி இயல் துறை பயிர் மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறது . தேசிய மாதிரி ஆய்வு நிறுவன இயக்குநரின் தொழில் நுட்ப ஆலோசனைகளின் கீழ் இப்பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பபடுகின்றன .பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய மாதிரி கிராமங்கள் புள்ளி இயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணி வேளாண்மைத் துறை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு , களப்பணி பல்வேறு நிலைகளில் குறிப்பாக அறுவடை நிலையில் புள்ளி இயல் துறை வேளாண்மைத் துறை, தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகின்றன.