பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, வருகிற 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.மேலும் ,அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு, உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்வு அட்டவணை விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். இறுதியாண்டு பிராஜக்ட், பிராக்டிக்கல் தேர்வு வைக்கவில்லை என்றால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, எழுத்து தேர்வுகள் முடிந்தபின், அந்த தேர்வுகளை நடத்தி கொள்ளலாம். இன்டர்னல் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இருப்பவர்கள், விரைவில் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது .