சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்ட முன்னோடிகள் கொண்டிருந்த தொலைநோக்கு சிந்தனைக்கு முரண்பட்டதாக குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா இருக்கிறது என்று கூறினால் அது மிகையானதாக இருக்காது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா, இதுவரை அமலில் இருந்த குடியுரிமை சட்ட மசோதா 1955-க்கு மாற்றாக அமைகிறது. துயரமிக்க பிரிவினை மற்றும் பெருமளவிலான, மக்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய பின்னணியில் அப்போது அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
குடிபெயர்ந்து வருவது இன்னும் முடிந்துவிடவில்லை. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்க இந்தியா முடிவு செய்த நிலையில், பாகிஸ்தான் 1956ல் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அப்போது முதன்முதலில் அவ்வாறு மாறியது பாகிஸ்தானாக தான் இருக்கும்.
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா கூறிய எச்சரிக்கைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தான் இந்த அறிவிக்கையை பாகிஸ்தான் செய்தது. அவர் 1948ல் காலமாகிவிட்டார்.
மதசார்பு நாடாக பாகிஸ்தானின் அரசு தீவிர செயல்பாடுகள் காட்டிய நிலையில், முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் துன்பங்கள் அதிகரித்தன. மத அடிப்படையில் துன்புறுத்தல்கள் அதிகமானதால் பெருமளவிலான முஸ்லிம் அல்லாதவர்கள் அருகில் உள்ள இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் அங்கு முஸ்லிம் அல்லாதவர்களின் மக்கள் தொகை 2 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. பிரிவினைக்குப் பிறகு சுமார் 4.7 மில்லியன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தங்களை ஏற்றுக் கொண்ட நாட்டில், தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லாவிட்டாலும், எந்த நாட்டையும் சாராத அகதிகளாக வாழும் அந்த மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதற்காக குடியுரிமைச் சட்டம் 1955 உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மதச்சார்பற்ற நாடு என்ற அடிப்படையை வலியுறுத்தும் நிலையில், எந்த மதத்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை ஏற்றுக் கொள்வது தான் எழுத்திலும், எண்ணத்திலும் கொள்கையை பின்பற்றுவதாக இருந்தது.
நீண்டகாலம் நிலுவையில் இருந்த கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையில் குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்,
இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது இந்த மசோதாவின் சிறப்பம்சம். முதலில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி கடந்த 12 மாத காலம் தொடர்ச்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளில் 11 ஆண்டுகளும் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் இந்தத் தகுதி உண்டு என கூறப்பட்டுள்ளது. புதிய திருத்த சட்ட மசோதாவின்படி, இந்த காலக் கெடு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, மசோதாவில் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து வந்துள்ள, மேற்படி மதத்தவர்களுக்கு இந்தத் தகுதி உண்டு என கூறப்பட்டுள்ளது.
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் போராடுவது ஏன்?
மசோதாவில் குறிப்பிட்டுள்ள நாடுகளில், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வருத்தமான உண்மை நிலையை மசோதா கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாவது என்பதும், அதுபோன்ற துன்புறுத்தல் இல்லாமல் வெளியேறியவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இதன் அடிப்படையில் ரோஹிங்யா முஸ்லிம்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மியான்மரில் ஆட்சியில் உள்ள அரசுடன் ரோஹிங்யா மக்களுக்கு மோதல் உள்ளது. அரசுக்கு எதிரான சண்டை காரணமாக பெருமளவில் அருகில் உள்ள வங்கதேசத்துக்குச் சென்றுள்ளனர். மியான்மருக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை இந்தியாவுக்கும் பரவியது. இதுபோன்ற தேவைகளின் போது, அவர்கள் எந்த நாட்டுக்கு உரியவர்களோ அங்கேயே மறுகுடியமர்வு செய்வதன் மூலம் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.