அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி!

1060 பேருக்கு வாய்ப்பு!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி சுமார் 1060 பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. பொறியியல் மற்றும் பொறியியல் சாராத சுமார் 15 துறைகளுக்கான விரிவுரையாளர் பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.  2017 -18ம் கல்வியாண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலிப்பணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் எஞ்சினியரிங் 112 இடங்கள், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் 219 இடங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் 91 இடங்கள், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் 119 இடங்கள், கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் 135 இடங்கள், ஆங்கிலம் 88 இடங்கள், கணக்கு 88 இடங்கள், இயற்பியல் 83 இடங்கள், வேதியியல் 84 இடங்கள் உட்பட 1060 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

பொறியியல் பிரிவுகள்  சார்ந்த பணிக்கு  அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளுக்கு ஏற்ப 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஃபர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பொறியியல் அல்லாத பிரிவுகளுக்குத் துறைகளுக்கு ஏற்ப ஃபர்ஸ்ட் கிளாஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.7.2019 அன்றின்படி 59 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தமிழக அரசால் நடத்தப்படும் கணினி சார்ந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  http://trb.tn.nic.in  என்ற இணையதளம் சென்று விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி, விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், கம்ப்யூட்டர் முறையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.மேலதிக தகவல்களுக்கு  http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

source:dinakaran
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !