இஸ்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள 327 ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் 15-ம் தேதியன்று வெளியானது. இதற்கு பி.இ, பி.டெக் அல்லது அதற்கு இணையான படிப்பு மேற்கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், வரும் 10-ம் தேதியன்று இஸ்ரோ ஆராய்ச்சியாளர் பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (isro.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, திருவனந்தபுரம், சண்டிகர், குவாதி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி ஆகிய நகரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
ISRO Admit Card 2020 பதிவிறக்கம் செய்யும் முறை:-
விண்ணப்பதாரர்கள் isro.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்பு பக்கத்தில் ISRO Careers என்னும் பகுதியை கிளிக் செய்து ISRO Admit Card 2020 என்ற லிங்கை தேர்வு செய்யவும்.
தற்போது ISRO Admit Card 2020 அடங்கிய பக்கம் திறக்கப்படும்.
அங்கே விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு (Captcha Code) ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
TNPSC pdf
7/Tnpsc/grid-small
Previous Year Questions
9/Previous Year/slider-small
General Knowledge
20/பொது அறிவு தகவல்கள்/slider-small
தமிழ் - ஆங்கிலம்
கடற்படைத் தலைமையகம் → admiralty
செல்வாக்கு வளர்த்துக் கொள்ளுதல் → aggrandisement
கடற்படைத் தலைவர் → admiral
வரம்பற்ற ஆட்சி → absolutism