மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வழங்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
மொத்த காலியிடங்கள் : 161
துறைவாரியான பயிற்சிப் பணியிடங்கள்:- மைன்ஸ் - 60
எலக்ட்ரீசியன் - 30
பிட்டர் - 25
வெல்டர் -15
மெக்கானிக் டீசல் -10
கல்வித் தகுதி : மேற்கண்ட பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28.1.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் ஐடிஐ-யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.