நாகூர் ரூமி நூல்கள்




நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர்.ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

ஆல்ஃபா தியானம்

ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள்.
துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு பற்றிக்கொள்ளும்வரை காத் திருக்கவேண்டும்.
எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள்.

மந்திரச்சாவி


உணர்ச்சியை காட்டுவது வேறு. உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியை காட்டலாம்.ஆனால் உணர்ச்சிவசப் படக் கூடாது. காரணம், உணர்ச்சியை காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப் படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுபாட்டில் இருக்கிறோம். உணர்ச்சியோடு அறிவை கலப்பது எப்படி என்பதை சுவாரசியமான சொல்லும் இப்புத்தகம்.

வரலாறு படைத்த வரலாறு



உலகின் புகழ் பெற்ற, சாதனை படைத்த மாமனிதர்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் உயரிய பண்புகளையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல்.



அடுத்த வினாடி  



உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது.


குறிப்பு : நூல்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக மட்டுமே நூல்கள் பகிரப்படுகிறது . இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள் .

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !