இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகோஷன் சென்டர் (Space Applications Center)-ல் Scientist,Technical Assistant,Technician-பதவிக்கு வேலைவாய்ப்பு!


இஸ்ரோவின் ஓர் அங்கமான ஸ்பேஸ் அப்ளிகோஷன் சென்டர் (Space Applications Center)-ல் இன்ஜினியர்(Scientist), தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistant), டெக்னீசியன் (Technician) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு  பிரிவுகளில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

குரூப் A  பிரிவில்  ஆராய்ச்சியாளர் மற்றும் என்ஜினீயர் பதவிக்கு மொத்தம் 21 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் , எலெக்ட்ரானிக்ஸ், இயற்பியல் ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

குரூப் B   பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistant) பதவிக்கு   எலெக்ட்ரானிக்ஸ்- 2, மெக்கானிக்கல் – 1, சிவில் – 1, எலெக்ட்ரிக்கல் – 1 என 5  காலியிடங்கள் உள்ளன.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


குரூப் C    பிரிவில்  எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, பிளம்பர், கார்பெண்டர், எலெக்ட்ரிசீயன், மெக்கானிக்கல், கெமிக்கல் ஃபிட்டர், மெஷினிஸ்ட், ஆகிய துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


மேற்கண்ட பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள்  www.sac.gov.in என்ற இஸ்ரோவின் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை   03-04-2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கு கட்டணம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.







எழுத்து தேர்வு 07-06-2020 அன்று அகமதாபாத்-ல் நடைபெறும்.






மேலும் விவரங்களுக்கு www.sac.gov.in


Official Notification Download

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !