தமிழர் அளவைகள் - கே.பகவதி

தமிழர் அளவைகள்


தமிழர் பண்பாடு, வாழ்க்கை , இலக்கியம் ஏனையவைகளைப் பற்றியெல்லாம் ஆய்வு செய்வது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஏற்கனவே தமிழர் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன.

தமிழர் ஆடைகள், தமிழ்க நாட்டுப்புறக்கலைகள், தமிழர் நாட்டு விளையாட்டுக்கள், தமிழர் உணவு போன்றவை குறிப்பிடத்தக்கன. இப்போது தமிழர் அளவை பற்றி இந்நூல் வெளிவருவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் ஆழ்ந்த அறிவின் புலப் பாட்டை அவர்களுடைய எண்ணல் அளவை குறிப்பிடும்.

உதாரணமாக ஒரு சதுர அடிக்குள் எத்தனை மணல்கள் இருக்கும் என்பதைக்கூட காணுகின்ற திறன் தமிழர்க்கு இருந்ததை நாம் அறிவோம். அந்நிலையில் 'தமிழர் அளவைகள்' என்ற இந்நூல் தமிழரின் அறிவுப்புலன், பகுப்புப்புலன் போன்றவற்றை உணர்த்த துணையாக அமையும்.