மனமும் அதன் இரகசியங்களும் - சுவாமி சிவானந்தா

மனமும்  அதன் இரகசியங்களும் அதை அடக்கி ஆளும் முறையும்மனமும் அதன் இயக்கங்களும் பற்றிய விவரம் மக் களிற் பெரும்பாலோர் அறியார். படித்தவர்கள் எனக் கூறிக்கொள்வோரும்கூட மனத்தின் தத்துவார்த்தத்தை யும், அதன் இயல்பையும், இயக்கங்களையும்பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாதவர்களாயிருக்கிறார்கள்.

 மனம் என்பதைப்பற்றி அவர்கள் ஏதோ கேட்டுத்தானிருக்கிறார்கள் . யோகிகள் என்ன, தியானமும் சுயச்சோதனையும் பழகு வோர்கள் என்ன - இவர்கள் தான் மனத்தின் இருப்பிடத் தையும், அதன் தன்மையையும், அதன் போக்குகளையும், நுட்பமான இயக்கங்களையும் பற்றித் தெரிந்துள்ளார்கள். மனத்தை அடக்கும் பல வழிகளையும் அவர்கள் தெரிந்துள்ளார்கள்.
#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !