டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.70,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

 கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.70,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .  டிப்ளமோ, கணினி பொறியியல் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : Diploma in Information Technology, B.E  மற்றும் B.Tech Computer Science Engineering, Diploma in Computer Networking.

 வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் வழியாக www.edcilindia.co என்ற இணையதளம் மூலம் 23.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.08.2020

 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரபூர்வ இணையதளம்  www.edcilindia.co.in 

Official Notification  Download

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !