தமிழக காவல்துறையில் 10,000 அதிகமான வேலைவாய்ப்பு !

 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை (Online application) வரவேற்கிறது.
சில பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

காலிப்பணியிடங்கள் : 10,906.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு ,உடல் தகுதி தேர்வு , சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக்கு கட்டணம் :ரூ.130/.

தேர்வுக்கான முக்கிய நாட்கள்

   1.இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் - 26.09.2020

  2. இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் -  26.10.2020

  3.எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்  - 13.12.2020
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்  Download 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !