உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடித்தது!

 



உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியல்  2020-ல்,  இந்தியாவை 4 இடங்கள் முன்னேறி  48வது இடத்தில்  உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)வைத்துள்ளது.    கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், இது இந்தியாவை மேம்படுத்தும் செய்தியாக வந்துள்ளது.  மேலும் நாட்டின்  வலுவான ஆராய்ச்சி & மேம்பாடு சூழல் அமைப்புக்கு  சான்றாக உள்ளது. 



இந்தியா  2015-ம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்தது.  2019-ம் ஆண்டில் 52 வது இடத்தை பிடித்தது.   உலகம் முழுவதும் மிகவும் புதுமையான வளர்ந்த நாடுகளின் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. கடந்த 5 ஆண்டுகளாக, இந்தியா தனது கண்டுபிடிப்பு தரவரிசையில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதால், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் 2019 -ன் முன்னணி கண்டுபிடிப்பு சாதனை நாடுகளில் ஒன்றாக  இந்தியாவை WIPO ஏற்றுக்கொண்டது.


மிக பரந்த அறிவு மூலதனம், துடிப்பான புதிய நிறுவனங்களின்  சுற்றுச்சூழல் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களால் செய்யப்பட்ட அற்புதமான பணிகள் காரணமாக, உலகளாவிய கண்டுபிடிப்பு  தரவரிசை பட்டியலில் இந்தியா நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாட்டின் புதுமை கண்டுபிடிப்பு சூழலை மேம்படுத்தியதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, உயிரி தொழில்நுட்ப துறை, விண்வெளித்துறை ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன. 


மின்சார வாகனங்கள், பயோடெக்னாலஜி, நானோ தொழில்நுட்பம், விண்வெளி, மாற்று எரிசக்தி ஆதாரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் கொள்கை தலைமையிலான கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவதன் மூலம், தேசிய முயற்சிகளை மேம்படுத்துவதை உறுதி நிதி ஆயோக் அயராது உழைத்து வருகிறது.  

புதுமை கண்டுபிடிப்புகளை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்குவதற்கான திசையில் முக்கிய நடவடிக்கையாக, நிதி ஆயோக் கடந்த ஆண்டு வெளியிட்ட இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்பு பட்டியல்  பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலையை கண்காணிப்பதிலும் மதிப்பீடு செய்வதிலும் ஒரு நிலையான உந்துதலை, உலகளாவிய  புதுமை கண்டுபிடிப்பு பட்டியல்,  நிதி ஆயோக் ஆகியவை வழங்கியுள்ளது.


உலக தரவரிசை பட்டியலில் மேலும் முன்னேறுவதில், இந்திய தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். அறிவியில் ரீதியான கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டால் மட்டும்தான் மாண்பு மிகு பிரதமர் விடுத்துள்ள தற்சார்பு இந்தியா அழைப்பை நனவாக்க முடியும். 

அரசு ஐடிஐ-யில் சேர செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்!

 இந்தியா ஒரு முன்னுதாரண மாற்றத்தை கொண்டு வந்து அடுத்த உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில்  முதல் 25 நாடுகளில் இடம் பெறுவதை நோக்கமாக கொள்ள வேண்டிய நேரம் இது. 

Post a Comment

0 Comments