கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அக்டோபர் 7- முதல் LKG படிப்பிற்க்கான சேர்க்கை துவக்கம்

 இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் rte.tnschools.gov.in என்கிற இணையதள  முகவரியிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நினைளையில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில்  பெற்றோர்கள் விண்ணப்பித்த பள்ளியின் தகவல் பலகையிலும் rte.tnschools.gov.in என்கிற இணையதள முகவரியிலும் வெளியிடப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் வரும் அக்டோபர் முதல் தேதி அன்று குழுக்கள் செய்யப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !