5-ஆம் வகுப்பு முடித்துள்ளவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 60 பணியிடங்களுக்கான கிராம உதவியாளர் வேலை!

 




சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை வட்டம் வாரியாக நிரப்பிட விண்ணப்பதாரர்களிடமிருந்து பின்வரும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியானவர்கள் 29.10.2020 முதல் 20.11.2020 வரை ஆஃப்லைன் (தபால் மூலம்) பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . பின்வரும் காலியிடத்தில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி போன்றவற்றை கீழே தெரிந்துகொள்வோம்.




*அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29.10.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2020

மொத்த காலியிடங்கள்: 60

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு 

கீழ்காணும் நிபந்தனைகள் அவசியம் :

1. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்/வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல்வேண்டும். 

2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 

3. மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால்/நேரிடையாக அனுப்பிட வேண்டும். 

மேற்படி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு தேர்வு/ நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:அஞ்சல்  துறை (by Post )

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு https://sivaganga.nic.in/notice_category/recruitment/ க்குச் செல்லவும் .
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • உத்தியோகபூர்வ அறிவிப்புகளை கவனமாகப் படித்து, உங்கள் தகுதிகளைச் சரிபார்க்கவும்.
  •  தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து  மற்றும் சுய கையொப்பத்தால் சான்றளிக்கவும்.
  • இறுதியாக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை சரிபார்த்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.

Official Notification  Download


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !