அறிந்து கொள்வோம் - சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (மெரிட்)

 இத்திட்டம் எதற்கு?


ப்ரீ – மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் அளவில் கல்வி உதவித்தொகை வழங்குவது என்பது, பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புமாறு சிறுபான்மை பிரிவு சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் ஊக்குவிக்கச் செய்வதுடன், பள்ளிக் கல்வி மீதான அவர்களுடைய நிதிச் சுமையை குறைக்கும்.

இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றான கல்வி மூலம் ஆற்றல் பெறச் செய்தலுக்கு, சிறுபான்மை சமுதாயத்தினரின் சமூக – பொருளாதார நிலைகளை மேம்படுத்திட வழிவகுக்கும் ஆற்றல் திறன் உள்ளது.

இத்திட்டத்தின் பலன்கள்:

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகள்) அவர்களுடைய கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

மாநில அரசுகள் மூலம் மத்திய அரசால் மாணவர்களுக்கு 100 சதவிகிதம் நிதியுதவி வழங்கப்படும்.

பெண் குழந்தை கல்விக்கு 30 சதவிகித ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர்வது எப்படி?

  • ஓராண்டுக்கு (போஸ்ட் மெட்ரிக்) 2 லட்சத்திற்கு மற்றும் 1 லட்சம் (ப்ரீமெட்ரிக்) மேற்படாமல் குடும்ப வருமானம் உள்ள முந்தைய இறுதி தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்ணுக்கு குறையாமல் அல்லது அதற்கு சரிநிகரான கிரேடு பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும். scholarships.gov.in (ப்ரி மெட்ரிக் மே 1 ம் தேதி முதல் ஜுலை 31ம் தேதி வரை மற்றும் போஸ்ட் மெட்ரிக் ஜுன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை)
  • தேவையான ஆவணங்களின் பட்டியல் – மாணவர் நிழற்படம், நிறுவன சரிபார்ப்பு படிவம், வருமானச் சான்றிதழ், மாணவர் உறுதிமொழி, மதச் சான்றிதழ், மதிப்பெண் அட்டை, நடப்பு படிப்பு ஆண்டின் கட்டண ரசீது, குடியிருப்பு சான்றிதழ்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !