மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை!

 மதுரை  மாவட்டத்தில்  காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்  பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 11 இடங்கள் காலியாக உள்ள  நிலையில் ரூ.1.12 லட்சம் வரையில் சம்பளம் அறிவித்துள்ளது. 



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



விண்ணப்பிக்கும் முறை: 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் | (வளர்ச்சி பிரிவு ),மாவட்ட ஆட்சியரகம் ,மதுரை - 625020  என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 (வெள்ளிக்கிழமை) அன்று | பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://madurai.nic.in/notice_category/recruitment/

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் View

                  விண்ணப்பபடிவம்   view


இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! 


Post a Comment

0 Comments