கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ரூ.10,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு!

STUDENT PROJECTS SCHEME 

இந்த திட்டத்தின் நோக்கம் நமது மாநிலத்தில் கிடைக்கும் மகத்தான மாணவர் திறமை மற்றும் திறன்களை வளர்த்து பயன்படுத்துவதும், நமது சமூகத்திற்கு பொருத்தமான மற்றும் பயனுள்ள குறிப்பிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க அவற்றைப் பயன்படுத்துவதும் ஆகும்.

நிதி உதவி

இந்த திட்டத்தின் கீழ், யு.ஜி / பி.ஜி இன்ஜினியரிங் / பி.ஜி படிப்புகள், அறிவியல் / மருத்துவம் / வேளாண்மை / கால்நடை / சமூக அறிவியல் படிப்புகளில் பயின்ற போது, அவர்களின் வழக்கமான பாடத்திட்டத்தில் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட மாணவர்கள் பயனுள்ள சிறு ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ஊக்குவிக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 10000 / - க்கு ரூ .5000 / - மானியம் வழங்கப்படுகிறது. 

Tamilnadu State Council For Science And Technology எனப்படும் தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மாநில மன்றம் 2020 - 2021ஆம் ஆண்டிற்கான கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின்   ப்ராஜெக்ட்-காக (STUDENT PROJECTS SCHEME 2020-2021)  ஊக்க தொகை அதிக பட்சமாக ரூ.10,000 வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


UG/PG (Engineering-Civil: Mechanical: :EEE/ECE/EIE/ICE:CSE/IT/Computer Application / Software/Chemical ), PG (Professional Courses) and PG (all Sciences) இளநிலை  பொறியியல் மற்றும் முதுகலை   அறிவியல்  துறையில்  இறுதியாண்டில் ஆய்வுக்கட்டுரைகளை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படித்து அதன் படி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/DaiWjgMaFhq9H8H47 என்ற லிங்கில் உள்ள  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிரதி எடுத்து பின்பு தொடர்புடைய ஆவணங்களுடன்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 21-01-2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரபூர்வ இணையதளம் http://www.tanscst.nic.in/


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !