தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் (Field Assistant) - 2900 பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு!

 தமிழ்நாடு மின்சாரத்துறையில்  2,900 கள உதவியாளர் Field Assistant) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்க  19.03.2020 அன்று வெளியிடப்பட்டு 24.03.2020 முதல் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அரசால் அறிவிக்கப்பட்ட தடைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் கள உதவியாளர் (Field Assistant) பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக 15.02.2021 முதல் 16.03.2021 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

TamilNadu Generation and Distribution Corporation (TANGEDCO)

Name of Post

Field Assistant (Trainee)

Qualification

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme

Salary

Rs.18,800/- to Rs. 59,900/- per month

Total vacancy

2900

Age Limit

18-35 Years

Last Date

16/03/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tangedco.gov.in/FA2021.html என்ற இணையதளம் மூலம் 16/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 15/02/2021
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 16/03/2021


விண்ணப்பக் கட்டணம்:

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/முற்பட்ட வகுப்பினர் Rs.1000/-
  • ஆதிதிராவிடர் ,பழங்குடி வகுப்பினர் Rs.500/-
  • அனைத்து பிரிவினைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் Rs.500/-


தேர்வு செய்யப்படும் முறை :

உடற்தகுதி தேர்வு  மற்றும் எழுத்துத்தேர்வு  மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்   https://www.tangedco.gov.in/linkpdf/FA-Open-Close-Notification2021.pdf 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !