உங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா? தெரிந்துக்கொள்வது எப்படி?

  இந்திய அரசு வருமான வரிச் சட்டம் 1961 என்பதில் 234H என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. இந்த புதிய பிரிவின் படி, ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் PAN கார்டுடன் இணைக்க வேண்டும்.

PAN என்பது தனிநபர்கள் வங்கி கணக்குகளைத் திறக்கும்போது கட்டாயமாக தேவைப்படும் ஒரு ஆவணமாகும். எனவே, ஆதார் அட்டையை PAN கார்டுடன் இணைப்பது தானாகவே ஒரு நபரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் அவர்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கும். இந்த விதியைச் செயல்படுத்திய பின்னர் தனிநபர் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித் துறைக்கு எளிதாக இருக்கும்.


PAN ஆதார் கார்டு இணைப்பது எப்படி?


உங்கள் PAN ஐ ஆதார் உடன் இணைக்க, நீங்கள் வருமான வரித் துறையின் e-filing portal க்குச் செல்ல வேண்டும்.

இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் PAN எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

அடுத்து Captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும்.

‘Link Aadhaar’ எனும் விருப்பத்தில் கிளிக் செய்தால், உங்கள் PAN ஆதார் இணைப்பு முடிந்துவிடும்.

வருமான வரித்துறை உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்க்கும், அதன் பிறகு இணைக்கப்படும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் உடன் PAN இணைப்பது எப்படி?

வருமான வரித்துறையின் தகவலின்படி e-filing portal வலைத்தளத்தைப் பயன்படுத்தி உங்கள் PAN மற்றும் ஆதார் எண்ணை ஆகியவற்றை இணைக்க முடியாவிட்டால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற ஏதேனும் ஒரு எண்ணுக்கு UIDPAN (12-இலக்க ஆதார் எண்) (10-இலக்க PAN) என்ற வடிவில் SMS அனுப்புவதன் மூலம் இணைக்க முடியும்.


உங்கள் ஆதார் அட்டை மற்றும் PAN கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க:

http://www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

PAN மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

‘View Link Aadhaar Status’ என்பதைக் கிளிக் செய்க

இணைப்பின் நிலை அடுத்து தோன்றும் திரையில் காண்பிக்கப்படும்.

அவ்வளவுதான்!


பயனர் தங்கள் PAN மற்றும் ஆதார் இணைக்க https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ வலைத்தளங்களையும் பார்வையிடலாம்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !