மனம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இத்யம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு.
ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா ? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடி யுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங் குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை.
இதற்கான தேடலின் ஆரம்பம்தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
4.மனம்_என்னும்_மாமருந்து_உமர்_பாருக்