மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்றான மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர்,திட்ட ஒருங்கிணைப்பாளர் (Project Assistant , Project Associate) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ ,பி.எஸ்சி மற்றும் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு என்பது சண்டிகர்-ஐ மையமாக கொண்ட தேசிய ஆய்வகமாகும், இது அறிவியல் மற்றும் தொழில்துறை கருவிகளின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.csio.res.in என்ற இணையதளம் வழியாக 18.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.11.2020
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
View
0 Comments